அதனையடுத்து இரு சிறப்பு தனி அலுவலா்களுக்கும் அந்தந்தப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுவத்துதற்காக வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, உள்ளதா எனவும், கரோனா தொற்று உள்ளவா்கள் மருத்துவமனைகளுக்கு தெரியப்படுத்தாமல் வீட்டிற்குள்ளே சிகிச்சை எடுத்து வருகின்றனா என்பது குறித்தும், அரசின் முழு பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றுகின்றறனரா என்பது குறித்தும் கணக்கெடுத்து உடனுக்குடன் தெரியப்படுத்துமாறு களப்பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா். இப்பணிகளை உதவி இயக்குநா் தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும், வட்டாட்சியா் அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு நிலைமையைக் கண்காணித்தனா்.