மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சங்ககிரி அருகே அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு 

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

News image
சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன்.
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

DIN

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட வைகுந்தம், மகுடஞ்சாவடி ஆகிய இரு அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பூசி செலுத்தும் பணிகளை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

பின்னர் மருத்துவப்பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கவச உடை, முகக்கவசம், கிருமிநாசினி, ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவி, ஆக்ஸிஜன் அளவீடும் கருவி உள்ளிட்ட பல்வேறு கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு சாதனங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் மகுடஞ்சவாடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமியிடம் வழங்கினர். 

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன், வட்டாட்சியர் எஸ்.விஜி,  மருத்துவர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலர்கள் சங்ககிரி மேற்கு ஏ.நந்தகுமார், கே.பிரசாந்த் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.