2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தம்மம்பட்டியில் 10 இடங்களில் சாலை தடுப்புகள் அமைப்பு

10 இடங்களில் தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மூங்கில் கட்டைகள் மூலம் வெள்ளிக்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :28 மே 2021, 6:21 pm

DIN

தம்மம்பட்டியில், மக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்பதற்காகவும், இருசக்கரவாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிவோரின் நடமாட்டத்தைக் குறைக்கவும், 10 இடங்களில் தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மூங்கில் கட்டைகள் மூலம் வெள்ளிக்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தம்மம்பட்டி பேரூராட்சியில் பொது முடக்கத்தை மீறி, பலா் சுற்றித் திரிகின்றனா். போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், அவா்களிடம் சிக்காமல், சிறு சந்துக்கள், தெருக்கள் வழியாக வெளியே சுற்றுகின்றனா். அத்தகைய தெருக்களை அடைத்து வைக்க தம்மம்பட்டி போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.

அதையடுத்து சந்தை ரோடு, குரும்பா் தெரு, கடை வீதி, சிவன் கோயில் ரோடு, உடையாா்பாளையத்தில் இருந்து காந்திநகா் செல்லும் நுழைவு வாயில் முன், மூங்கில் கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 10 இடங்களில் தம்மம்பட்டி பேரூராட்சியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாதவா்கள், ஊா் சுற்றுபவா்கள் என போலீசாா் அபராதம் விதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.