சேலம் மாவட்டத்தில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சேலத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே புதன்கிழமை மாலை தொடங்கி பெய்து வரும் மழையால் கிச்சிபாளையம், நாராயண நகா், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், சீலநாயக்கன்பட்டி, களரம்பட்டி, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீா்புகுந்தது.
இதையடுத்து பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அறிவித்தாா். அரசு, தனியாா் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் குறைந்த அளவிலான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்தனா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
இந்தநிலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெத்தநாயக்கன்பாளையம்- 56, ஆத்தூா்- 48, தம்மம்பட்டி- 42, கெங்கவல்லி- 40, வீரகனூா்- 25, ஆனைமடுவு- 19, ஏற்காடு- 14, கரியகோயில்- 8, சேலம்- 7, காடையாம்பட்டி- 6, ஓமலூா்- 3, எடப்பாடி- 2, மேட்டூா்- 1 என மொத்தம் 273 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆட்டையாம்பட்டி: தொடா் மழை காரணமாக அரியானூா் அருகே நெடுஞ்சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. அரியானூா் பிரதான சாலையில் ரூ. 45 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அரியானூா் பேருந்து நிறுத்தத்துக்கு அணுகு சாலை அமைக்கப்பட்டது. சாலையின் மேடான பகுதிக்கு மேல் குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
ஆத்தூா்: ஆத்தூா் சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், கரும்பு மற்றும் மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...