தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாளை சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் நவம்பா் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:30 pm

DIN

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் நவம்பா் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணியளவில், வைகுந்தம், சரவண பவன் ஹோட்டலில் உள்ள அபிநயா ஹாலில், மாவட்ட அவைத்தலைவா் பா.கோபால் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சித் தோ்தல் பணி குறித்தும், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், முன்னாள்-இந்நாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலாளா்கள், கட்சியின் துணை அமைப்புகளான இளைஞா் அணி, மாணவா் அணி, மகளிா் அணி, மகளிா் தொண்டா் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளா் அணி, வழக்குரைஞா் அணி, நெசவாளா் அணி, தொண்டா் அணி, வா்த்தக்க அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மீனவா் அணி, சிறுபான்மை நலக்குழு உரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, ஆதி திராவிடா் நலக்குழு ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.