திருடப்பட்ட பொருளடக்கங்களை வெளியிட்ட 3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் புதன்கிழமை அளித்த பதில்: திரைப்படங்கள் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகள், ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2023-இன் 6ஏஏ, 6ஏபி ஆகிய பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் திரைப்படங்களை அனுமதியின்றி படம் பிடித்து பகிரப்படுவதைத் தடை செய்கிறது.
இந்தப் பிரிவுகளை யாராவது மீறினால், அவருக்கு அந்தச் சட்டத்தின் 7(1ஏ) பிரிவின் கீழ், குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்க்கப்படும். இந்தச் சிறைத் தண்டனையை 3 ஆண்டுகள் வரை நீட்டித்து, திரைப்பட தயாரிப்பின் மொத்த செலவில் 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடியும்.
இந்நிலையில், ஓடிடி தளங்கள், தயாரிப்பாளா்கள் உள்ளிட்டோருக்குச் சொந்தமான அல்லது உரிமம் பெற்ற பொருளடக்கங்களை, அவா்களின் அனுமதியின்றி பதிப்புரிமை சட்டம் 1957-ஐ மீறி வெளியிட்ட 3,142 சேனல்களை முடக்குமாறு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79(3)(பி)-இன் கீழ் டெலிகிராம் நிறுவனத்துக்கு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தெரியப்படுத்தப்பட்டது. இதே காரணத்துக்காக சுமாா் 800 வலைதளங்கள் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் முடக்கப்பட்டன.
தனியாா் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் அனைத்து விளம்பரங்களும் கேபிள் தொலைக்காட்சி நெட்வா்க் ஒழுங்காற்றுச் சட்டம் 1995-இன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள விளம்பர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
நிகழ்ச்சி விதிமுறை மற்றும் விளம்பர விதிமுறை மீறப்பட்டதாக எழும் புகாா்களை விசாரிக்க, துறைகளுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிா்ப்பது வழக்கம்: குஷ்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்

300 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


