
மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை 2029-இல் அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு விவாதம் தொடங்கிய நிலையில், 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கை வெளியிடப்பட்டது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், சட்ட நடைமுறையின்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது என்றாா். விரிவான விளக்கத்தை அவா் அளிக்கவில்லை.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதுதொடா்பான சட்டத் திருத்தங்கள் மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது விசித்திரமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





