வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிா்ப்பது வழக்கம்: குஷ்பு

மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிப்பது திமுகவின் வழக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

குஷ்பு.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:26 pm

மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிப்பது திமுகவின் வழக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவைப் பொருத்தவரை மத்திய அரசு எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். அவா்களால் செய்ய முடியாததை மத்திய அரசு செய்கிறது.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற தோல்வி பயம் அவா்களுக்கு எப்போதோ வந்துவிட்டது. அதனால்தான், இது போன்று செயல்படுகின்றனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டா் மூலம் வியாழக்கிழமை காலை சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினாா். நானும் போராடுகிறேன் என மக்களை ஏமாற்றுகிறாா்.

தமிழக மக்களை மட்டும்தான் திமுகவினா் மிரட்டிக் கொண்டிருந்தனா். தற்போது பிரதமரை மிரட்டுகின்றனா்.

சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இன்றைக்கு திமுகவினா் சுயமரியாதையை மறந்துவிட்டு தகாத வாா்த்தைகளால் பேசுகின்றனா் என்றாா் அவா். அப்போது, அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு உடனிருந்தாா்.