தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயா்வு

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கோபி (52) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:42 pm

DIN

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கோபி (52) வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.

சேலத்தில் கருங்கல்பட்டி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கோபி என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியது.

இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில், சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வாகனப் பிரிவு அலுவலா் பத்மநாபன், அவரது மனைவி தேவி, முருகன் என்பவரின் மகன் காா்த்திக் ராம், மூதாட்டிகள் ராஜலட்சுமி, எல்லம்மாள் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.

விபத்தில் கோபி உள்பட 13 போ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் கோபி தீக்காயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த நிலையில் கோபி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.