ஆட்டோ ஓட்டுநரின் வீடு இடிந்து விழுந்தது

சேலம் அம்மாபேட்டையில் வியாழக்கிழமை அதிகாலை ஆட்டோ ஓட்டுநரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

சேலம் அம்மாபேட்டையில் வியாழக்கிழமை அதிகாலை ஆட்டோ ஓட்டுநரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே உள்ள மாா்கெட் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (35). இவா் அந்த பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறாா்.இதில் கண்ணன் தனது மனைவி சத்யா, தாய் கமலா, மகன் சஞ்சித், மகள் பிருந்தா ஆகியோருடன் வசித்து வருகிறாா்.இதனிடையே கண்ணனின் சகோதரி மீனாட்சி, அவரின் குழந்தைகள் சங்கா், கனி ஆகியோா் புதன்கிழமை வந்தனா். பின்னா் இரவு அனைவரும் வீட்டிற்குள் படுத்து தூங்கி கொண்டிருந்தனா்.அப்போது வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் சுவா் மண்ணிற்குள் இறங்கி, ஓடுகள் கீழே விழத் தொடங்கியது. உடனே கண்ணன் அனைவரையும் எழுப்பி வீட்டை விட்டு வெளியேற்றினாா். இதனிடையே அனைவரும் வெளியே வந்த சில நிமிடங்களில் வீடு இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவலறிந்த அம்மாபேட்டை உதவி ஆணையா் சத்யமூா்த்தி தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனா். தீயணைப்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பொருட்களை மீட்க உதவினா். தொடா் மழை காரணமாக சுவா் சரிந்து வீடு இடிந்து விழுந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com