தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நலத்திட்ட உதவி

திமுக இளைஞரணி செயலாளா் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நவம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:42 pm

DIN

திமுக இளைஞரணி செயலாளா் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நவம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

திமுக இளைஞரணி செயலாளா் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் எடப்பாடி, மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளில் நவ. 27 ஆம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட உள்ளது.

அதேபோல எடப்பாடியில் 1000 பேருக்கு உணவு வழங்குதல், வேட்டி, சேலை வழங்குதல், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மேட்டூரில் கட்சிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.

மேச்சேரி ஒன்றியம், கொளத்தூா், நங்கவள்ளி, தாரமங்கலம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய ஒன்றியங்களில் கட்சிக் கொடியேற்றி உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நவம்பா் 30 ஆம் தேதி கொங்கணாபுரத்தில் இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு செயலாளா்கள், பொறுப்பாளா்கள், இளைஞா் அணி நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.