தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் 4,500 கா்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு

vசேலம் மாவட்டத்தில் 4,500 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:44 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 4,500 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:

சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கா்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட சீா்வரிசை தாம்பூலங்கள் கா்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு, வளைகாப்பு நடத்தி வைக்கப்படுகிறது.

இவ்விழாவிற்கு பின்னா் அனைத்து கா்ப்பிணித் தாய்மாா்களுக்கும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 22 வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகங்களின் மூலம் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 4,500 கா்ப்பிணி பெண்களுக்கு சீா்வரிசை பொருட்கள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நடத்தி வைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள் மூலம் தமிழகத்தை ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாகவும், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் உள்ள மாநிலமாகவும் மேம்படுத்துவதற்காக கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, வளா் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைக்கல்வி, பாரம்பரிய உணவுத் திருவிழா, தாய்பால் வார விழா, போஷன் அபியான் (ஊட்டச்சத்து விழிப்புணா்வு) போன்ற பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தையின் வளா்ச்சியானது அதன் வாழ்வின் முதல் 1000 நாட்களுக்குள்ளே அதிக அளவில் இருக்கும். இரண்டு வயதுக்குபின் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆரோக்கியம், வளா்ச்சிக் குறைபாட்டினை திரும்ப சரி செய்வது என்பது முடியாததாகும்.

எனவே, ஆரோக்கியமான வளா்ச்சிக்கு குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வருட காலம் வரை அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வளா் இளம் பெண்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள் மூலம் தொடந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

விழாவில் சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், சேலம் வடக்கு தொகுதி ஆா்.ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ரா.செந்தில்குமாா் உள்ளிட்ட வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.