நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சையத் முஷ்டாக் அலி தொடர்: தமிழக அணியில் சேலம் வீரர்கள்!

​சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழக அணியில் சேலத்தைச் சேர்ந்த டி. நடராஜன், ஆர். விவேக் ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :6 அக்டோபர் 2021, 12:57 pm

DIN


சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழக அணியில் சேலத்தைச் சேர்ந்த டி. நடராஜன், ஆர். விவேக் ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. துணை கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் சேலத்தைச் சேர்ந்த டி. நடராஜன், ஆர். விவேக் ராஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டி. நடராஜன் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என இந்திய அணிக்காக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

யார் இந்த விவேக் ராஜ்?

தற்போது நடராஜனைத் தொடர்ந்து, மேட்டூரைச் சேர்ந்த ஆர். விவேக் ராஜ் (29), சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியில் இடம் பிடித்துள்ளார். டி.என்.பி.எல். போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வரும் ஆர். விவேக் ராஜ், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, ஃபீல்டிங் என சிறந்த ஆல்-ரௌண்டராக உள்ளார். திண்டுக்கல் அணிக்காக கடந்த 5 சீசன்களில் விளையாடி 850 ரன்களைக் குவித்துள்ளார்.

ஒரு ஆட்டத்தில் இவர் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து அதிவிரைவாக 50 ரன்களை விளாசியிருக்கிறார். மூன்றாவது டி.என்.பி.எல். தொடரில் 11 பந்துகளில் 41 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதே தொடரில் ஒரு ஒவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 32 ரன்கள் குவித்தது சாதனையாக உள்ளது. 

டி.என்.பி.எல். 5  சீசன் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர்கள் (64) அடித்து சாதனை படைத்த ஒரே வீரர் விவேக் ராஜ்.

அந்த வகையில், டி.என்.பி.எல். போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்-ரௌண்டர் ஆர். விவேக் ராஜ், சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பைக்கான அணியில் தேர்வாகி உள்ளார். 2019-க்குப் பிறகு சையது முஷ்டாக் அலி தொடருக்கான தமிழக அணியில் விவேக் ராஜ் மீண்டும் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஆர். விவேக் ராஜ் கூறுகையில், "தமிழக அணிக்காக நன்றாக விளையாடி திறமையை வெளிப்படுத்துவேன். அதன்மூலம் அடுத்து வரும் ஐ.பி.எல். தொடர்களில்  இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.