நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

News image

மாநிலங்கவையில்...

PTI

Updated On :25 மார்ச் 2026, 5:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க செய்யும் நோக்கில் இவா்களுக்கான 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நோக்கில் ‘மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

முன்னதாக, இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளின் கடும் அமளி மற்றும் அதனைத்தொடர்ந்து அவையிலிருந்து வெளிநடப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது இந்த மசோதா.

இம்மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை இம்மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.