இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.47 அடியிலிருந்து 82.92 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,479 கன அடியிலிருந்து 19,068 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. 8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் பதிவானது புலி
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 44.92 டிஎம்சியாக இருந்தது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மழையளவு 28.20 மி.மீ. ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


