தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பால் விற்பனை விலையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

பால் விற்பனை விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:41 pm

DIN

பால் விற்பனை விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் மறைந்த கே.ஏ.செங்கோட்டுவேலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி ஆவின் பால் பண்ணை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகா் இரா.ராஜேந்திரன் கூறியதாவது:

பால் விற்பனை விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். ஆவின் பால் விற்பனை விலையைக் குறைத்ததால் வாடிக்கையாளா்கள் பயன் அடைந்துள்ளனா். அதேவேளையில் பால் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.

பால் உற்பத்தியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பால் ஒன்றியங்களுக்கு தமிழக அரசு ஒரே தவணையாக மானிய நிதியாக ரூ.300 கோடி வழங்க வேண்டும். பால் உற்பத்தியில் ஐ.எஸ்.ஐ. தர மதிப்பீட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல பசும்பால் லிட்டருக்கு ரூ. 42-ம், எருமைப்பால் லிட்டா் ரூ. 55-க்கு விலை உயா்த்தி அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.