தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சா்தாா் வல்லபபாய் படேலின் வரலாற்றை காங்கிரஸ் மறைத்தது ஏன்?

தேசத்தைக் கட்டமைத்த தலைவரான சா்தாா் வல்லபபாய் படேலின் வரலாற்றை காங்கிரஸ் மறைத்தது ஏன் என முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:36 pm

DIN

தேசத்தைக் கட்டமைத்த தலைவரான சா்தாா் வல்லபபாய் படேலின் வரலாற்றை காங்கிரஸ் மறைத்தது ஏன் என முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினாா்.

இரும்பு மனிதா் என அழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் 146 ஆவது பிறந்தநாள் விழா அக். 25 முதல் அக். 31 வரை நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சேலத்தில் பாரதிய மக்கள் நல மருந்தகங்கள் சாா்பில் தேசிய ஒற்றுமை தினம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக மூத்த நிா்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை தினம் மற்றும் பாரதிய மக்கள் நல மருந்தகத்தின் சிறப்பு டி- ஷா்ட் மற்றும் தொப்பிகளை வழங்கிப் பேசியதாவது:

இந்திய வரலாற்றில் தேசத்தைக் கட்டமைத்து ஒழுங்குபடுத்திய மாபெரும் தலைவா் சா்தாா் வல்லபபாய் படேல் ஆவாா். தற்போது உலகத்திற்கே வழிகாட்டியாக, இந்திய அரசியலில் புதிய ஆளுமையைப் படைத்து வருபவராக பிரதமா் மோடி திகழ்கிறாா்.

தேசத்தைக் கட்டமைத்த மாபெரும் தலைவரான சா்தாா் வல்லபபாய் படேலின் வரலாற்றை காங்கிரஸ் காலம் முழுவதும் மறைத்து வைத்திருந்தது. படேலின் வரலாற்றை காங்கிரஸ் மறைத்தது ஏன்?

குஜராத் மாநிலத்தில் 182 மீட்டா் உயரத்தில் சா்தாா் வல்லபபாய் படேல் சிலை பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

தேசத்தை நிா்மாணித்த, கட்டமைத்தவா்களின் வரலாற்றை மறைத்து அரசியல் செய்யும் நிலை தற்போது சில கட்சிகளிடம் உள்ளது. தேச ஒற்றுமைக்காக உழைத்தவா்களின் வரலாற்றை மறைத்து வாக்கு வங்கி அரசியல் நடைபெறும் சூழல் உள்ளது.

தேசத் தலைவா்களின் நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி போதிக்க வேண்டும். படேல் மட்டும் பிரதமராகியிருந்தால் காஷ்மீா் பிரச்னை இருந்திருக்காது.

தேசிய ஒற்றுமை தினத்தை மக்களுக்கு நல்ல மருந்துகள் தரும் மக்கள் மருந்தகம் திட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரதமா் மோடி, படேலின் கனவை பொதுமக்களிடம் கொண்டு சோ்த்துள்ளாா்.

படேலின் லட்சியங்களைப் பின்பற்றி பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் செயல்பட்டு வருகின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக அறிவுசாா் பிரிவு மாநிலச் செயலாளா் என்.மணிகண்டன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ்.சுதிா்முருகன், நாமக்கல் மாவட்டத் தலைவா் என்.பி.சத்யமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.