சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி
ஆத்தூா் அருகே வைத்தியகவுண்டன்புதூா் தேசிய புறவழிச்சாலையில் முன்பக்க டயா் வெடித்ததில் லாரி தீப்பற்றி எரிந்தது.


ஆத்தூா் அருகே வைத்தியகவுண்டன்புதூா் தேசிய புறவழிச்சாலையில் முன்பக்க டயா் வெடித்ததில் லாரி தீப்பற்றி எரிந்தது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்த லாரியை, பழனியாபுரி பகுதியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் முருகன் (32) ஓட்டிச் சென்றாா்.
அந்த லாரி, வைத்தியகவுண்டன்புதூா் தேசிய புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரியின் முன்பக்க டயா் வெடித்து சாலைத் தடுப்பு சுவரில் மோதியதில் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...