மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாழப்பாடி அருகே அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன கருக்கலைப்பு பயிற்சி முகாம்

வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப நலத்துறை சார்பாக, அங்கன்வாடி மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு,

News image

வாழப்பாடி அருகே அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன கருக்கலைப்பு பயிற்சி முகாம்.

Updated On :3 செப்டம்பர் 2021, 10:36 am

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப நலத்துறை சார்பாக, அங்கன்வாடி மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு, நவீன கருக்கலைப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமிற்கு, சேலம் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் இளவரசி, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, வட்டார சுகாதார புள்ளியலாளர் அவினாசிலிங்கம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு நவீன கருக்கலைப்பு முறைகள், குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகள், தற்காலிக கருத்தடை முறைகள், மாத்திரை வழி கருக்கலைப்பு, உறிஞ்சு குழாய் சிகிச்சை முறை, மருத்துவ முறையில் கருக்கலைப்பு ஆகியன குறித்து விரிவான பயிற்சி அளித்தனர். 

Story image

அனைவருக்கும் பயிற்சிக் குறிப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன. பயிற்சியின் நிறைவில் வட்டார அங்கன்வாடி பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.