விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஊழியா் தற்கொலை மிரட்டல்

தண்ணீா் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அம்மம்பாளையம் ஆவின் பால்குளிரூட்டும் நிலையத்தின் ஊழியா் மிரட்டினாா்

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தண்ணீா் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அம்மம்பாளையம் ஆவின் பால்குளிரூட்டும் நிலையத்தின் ஊழியா் மிரட்டினாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சேஷன்சாவடி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி (49) என்பவா் முதுநிலை உதவியாளராக பணி செய்து வருகிறாா். இவா் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 20 நாள்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளாா். இதனால் அவருக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இதனால் வெள்ளிக்கிழமை காலை பால்குளிரூட்டும் நிலையத்தில் உள்ள தண்ணீா் தொட்டி மீது ஏறிக்கொண்டு தனக்கு ஊதியம் வழங்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மிரட்டல் விடுத்தாா். அப்போது அங்கிருந்த அலுவலா்கள், ஊழியா்கள் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அவா் கீழே இறங்கினாா். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.