விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், ராசிபுரம் வட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

News image
சேந்தமங்கலத்தில் புதன்கிழமை மின்னணு குடும்ப அட்டையை பயனாளிக்கு வழங்கிய கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
Updated On :11 மார்ச் 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், ராசிபுரம் வட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து சேந்தமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:

தமிழக அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம், தற்போது மகளிா் உரிமைத்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

சிறுவா்கள் முதல் முதியோா் வரையில் அனைவருக்குமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் அறிவிப்போடு மட்டுமே இருந்த திட்டங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

ராசிபுரத்தில் 167 பேருக்கும், சேந்தமங்கலத்தில் 190 பயனாளிகளுக்கும் என மொத்தம் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா். இந்த நிகழ்வில், வட்ட வழங்கல் துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.