காந்தி ஜெயந்தியையொட்டி சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள காந்திசிலை வளாகத்தில் காந்திஜி பொதுநலச் சங்கம், சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அக்கமாபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்து காந்தியின் கொள்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோபர், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கே.கே.நடேசன் ஆகியோர் மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
அக்கமாபேட்டை காந்திஜி பொதுநலச்சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.கே.முனியப்பன் முன்னிலை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
ரோட்டரி சங்க செயலர் என்.தியாகராஜன், பொருளாளர் கே.செந்தில்குமார், ரோட்டரி மாவட்ட கல்விக் குழுத்தலைவர் எ.வெங்கடேஸ்வரகுப்தா, முன்னாள் தலைவர்கள் கௌதம் வெங்கடாஜலம், சி.கே.ஆர்.ராமசாமி, நிர்வாகிகள் காத்திகேயன், பெர்ஸியா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகி பசுமை சீனிவாசன், வழக்குரைஞர் ராஜேந்திரன், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் எஸ்.சி.ராமசாமி, நிர்வாகிகள் சீனிவாசன், கிஷோர்பாபு, அமுதச்சுடர் அறக்கட்டளைத் தலைவர் வி.சத்தியபிரகாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமர்நாத் யாத்திரை: 3,800-க்கும் மேற்பட்ட இரண்டாவது குழு புறப்பட்டது

அதிகரிக்கும் தங்க விலை! 9 காரட் தங்க நகைகள் மாற்றாகுமா?
அனிதா ராதாகிருஷ்ணன் கைது! இன்றைய செய்திகள் ஜூலை 3 - நேரலை

ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு உதயநிதி கண்டனம்
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples



