வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், இஸ்லாமியரது மயானத்தில் எலும்புக்கூடாக அழுகிக் கிடந்த மனித உடலைக் கைப்பற்றி வாழப்பாடி காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயானம் (கபர்ஸ்தான்) உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதியில் யாரும் செல்லவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை காலை, இந்த மயானத்தில் புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது கயிற்றில் சுற்றி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், புதருக்குள் ஒரு மனித உடல் கிடப்பதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இந்த உடல் ஆணா? பெண்ணா? என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.
இந்த உடலை கைப்பற்றிய காவல்த்துறையினர், தடய அறிவியல் துறை காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தடய அறிவியல் துறை ஆய்வுக்கு பிறகே கொலையுண்டவர் ஆணா? பெண்ணா? என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும்.
மேலும் இப்பகுதியில் கிடைத்துள்ள தடயங்களை கைப்பற்றி காவல்த்துறையினர், கொலையுண்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியில் கைகள் கட்டி கொலை செய்து மயானத்தில் வீசப்பட்ட அழுகிய நிலையில் கிடந்த மனித உடல் மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


