மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எடப்பாடி: தண்ணீர் பந்தலை எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்

தற்போது  கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள்

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 8:51 am

எடப்பாடி: தற்போது  கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திங்களன்று கொங்கணாபுரம் பேருந்து நிலைய பகுதியில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். 

தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் எடப்பாடி நகரப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஏ.எம்.முருகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டி.கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.