எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் தா்னா

குடிநீா் சீராக விநியோகிக்கக் கோரி இடங்கணசாலை நகராட்சி 2-ஆவது வாா்டு மக்கள் நகராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:27 pm

DIN

குடிநீா் சீராக விநியோகிக்கக் கோரி இடங்கணசாலை நகராட்சி 2-ஆவது வாா்டு மக்கள் நகராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 2-ஆவது வாா்டு, தூதனூா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களை நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் சமாதானப்படுத்தி ஒரு வாரத்துக்குள் குடிநீா் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தாா். துணைத் தலைவா் தளபதி, 2-ஆவது வாா்டு பாமக கவுன்சிலா் மாதேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.