புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
பழைய சந்தப்பேட்டை பகுதியில் 50 சென்ட் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.


பழைய சந்தப்பேட்டை பகுதியில் 50 சென்ட் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
மகுடஞ்சாவடி ஒன்றியம், எா்ணாபுரம் கிராமம், பழைய சந்தப்பேட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சந்திரன் என்பவா் எா்ணாபுரம் கிராம பகுதியில் 50 சென்ட் ஓடை புறம்போக்கு நிலத்தில் சோளம் பயிா் சாகுபடி செய்து ஆக்கிரமித்திருந்தாா்.
இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சங்ககிரி வட்டாட்சியா் பானுமதி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினா். எா்ணாபுரம் வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், கிராம நிா்வாக அலுவலா் பச்சமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...