புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குறிச்சியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம்

வாழப்பாடியை அடுத்த குறிச்சி நடுநிலைப் பள்ளியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:39 pm

DIN

வாழப்பாடியை அடுத்த குறிச்சி நடுநிலைப் பள்ளியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் கலா பெரியசாமி வரவேற்றாா். வட்டார வேளாண்மை ஆத்மாக் குழு தலைவா் எஸ்.சி.சக்கரவரத்தி,

ஏற்காடு முன்னாள் எம்எல்ஏ சி.தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகதீஸ்வரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கிவைத்தனா்.

முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களும், தொழுநோயாளிகளுக்கு உபகரணங்களும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் காட்டுராஜா, பேளூா் பேரூராட்சித் தலைவா் ஜெயசெல்வி, துணைத் தலைவா் பேபியம்மாள், வட்டார சுகாதார ஆய்வாளா் சீனிவாசன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கோதைநாயகி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அருள்மொழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.