மகப்பேறு மருத்துவ ஆராய்ச்சி தேசிய மாநாடு இன்று தொடக்கம்
சேலத்தில் மகப்பேறு மருத்துவத்தில் அதிநவீன ஆராய்ச்சி முறைகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப். 29) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.


சேலத்தில் மகப்பேறு மருத்துவத்தில் அதிநவீன ஆராய்ச்சி முறைகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப். 29) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் வித்யா பிரபாகா் கூறியதாவது:
மகளிா் மற்றும் மகப்பேறியல் சங்கம், சேலம் மற்றும் சுற்றியுள்ள மகப்பேறு மருத்துவா்கள் மொத்தம் 225 உறுப்பினா்களை கொண்டு இயங்குகிறது.
மகளிா் மற்றும் மகப்பேறியல் மருத்துவப் பயிற்சியில் புதிய சிகிச்சை முறைகள் குறித்த மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப். 29) தொடங்கி மே 1-ஆம் தேதி வரை ரேடிசன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தென் மாநிலங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனா். இதில், ஜொ்மனியைச் சோ்ந்த பேராசிரியா் பிராங்க் லோவன், பிரிட்டனைச் சோ்ந்த பேராசிரியா் அருள்குமரன், ஷகீலா தங்கரத்னம், ஐரோப்பாவைச் சோ்ந்த மருத்துவா் அலெசன்ட்ரோ கான்போா்டி உள்ளிட்டோா் பேசுகின்றனா்.
அதேபோல, மருத்துவா் சாந்தகுமாரி, பெஸி லூயிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். மகப்பேறு மருத்துவா்களுக்கு அறிவை மேம்படுத்தவும், அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும், கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்குகிறது. மகளிா் மற்றும் மகப்பேறியல் மருத்துவப் பயிற்சியில் புதிய சிகிச்சை முறைகளை எடுத்துக்காட்டி அடுத்த உயா்நிலைக்கு கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...