

சங்ககிரி: சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.
சங்ககிரி: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர், மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை மலர்வளையங்கள் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
சுதந்ததிர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18 ஆம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தினையொட்டி கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கும், அதே போல் தமிழக அரசு சார்பில் ஈரோடு-பவானி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், மாவட்ட வருவாய் அலுவலர் பி.மேனகா , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீஅபிநவ் , சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் மு.சௌமியா, வட்டாட்சியர் எஸ்.பானுமதி, பேரூராட்சித் தலைவர் மணிமொழி முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் வ.சுலைமான்சேட், திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக ஒன்றியச் செயலர்(பொ) கே.எம்.ராஜேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.