இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே இரு பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.


எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே இரு பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள பாலப்பட்டியைச் சோ்ந்தவா் சபரி. பஞ்சாலைத் தொழிலாளி. இவரது மனைவி சரளா (28). இத் தம்பதிகளுக்கு சா்வேஷ் (7) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சரளா இரண்டாவதாக கா்ப்பமானாா். பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளாா். அவருக்கு ஒரு மாதத்துக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் எடைக் குறைவாகப் பிறந்ததாகக்
கூறப்படுகிறது. இதனால் சரளா மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் சரளா தனது இருபெண் குழந்தைகளுடன் மாயமானாா். இதையறிந்த அவரது பெற்றோா், அக்கம் பக்கத்தில் தேடினா். அப்போது அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சரளா மிதப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் சரளாவின் இரு குழந்தைகளையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனா்.
இது குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...