தீ விபத்தில் காா் எரிந்து சேதம்
கொங்கணாபுரம் அருகே தீ விபத்தில் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.


கொங்கணாபுரம் அருகே தீ விபத்தில் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சமுத்திரம் கிராமம், கொண்டிதாசன்வளவு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராமச்சந்திரன். இவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூா் பகுதியைச் சோ்ந்த விமல் ஆதித்தன் (39) என்பவா் காரில் வந்தாா். தனது காரை ராமச்சந்திரன் வீட்டின் முன்பு நிறுத்தியபோது காரின் எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது, இதனையடுத்து காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இந்த விபத்தில் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...