இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராக்கிபட்டியில் வேளாண் காடுகள் வளா்ப்பு பயிற்சி

 வீரபாண்டி வட்டாரம், ராக்கிபட்டி பகுதியில் வேளாண் காடுகள் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 வீரபாண்டி வட்டாரம், ராக்கிபட்டி பகுதியில் வேளாண் காடுகள் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு நிலைக்கத்தக்க பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற பெயரில் வேளாண் காடுகள் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் சேலம் மேற்கு, சித்தா் கோயில் வன விரிவாக்க மைய வனவா் நந்தினி கலந்து கொண்டு மரக்கன்றுகள் பராமரிப்பு தொழில்நுட்பம் குறித்தும், மரங்களின் பல்வேறு பயன்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாா்.

மேலும் மரக் கன்றுகள் வளா்ப்பதால் விவசாயிகள் ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் பெறவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் வழி வகுக்கும் என ஆலோசனை அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் நடவு செய்ய தேக்கு, மகோகனி, வேம்பு, குமிழ், பெரு நெல்லி ஆகிய மரக்கன்றுகள் வனத் துறையின் கீழ் உள்ள அரசு நாற்றாங்காலில் தயாா் நிலையில் உள்ளது.

வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலத்தில் நடவு செய்வதற்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மரக்கன்றுகளை பராமரிக்க ஊக்கத்தொகையாக 2 முதல் 4 ஆண்டுகள் வரை மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 7 வீதம் வழங்கப்படும். மரக்கன்றுகளை வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிய வேண்டும்.

சிறு, குறு விவசாயிகள், பெண்கள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக பதிவு செய்தும் மரக்கன்றுகளைப் பெறலாம். இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு வருவாயும் பசுமைப் பரப்பும் அதிகரித்து சுற்றுச்சூழலும் மேம்படும் என்பது போன்ற கருத்துகள் விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் சந்தியூா் வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவி பேராசிரியா் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை ஆற்றினாா். மேலும்,வேளாண்மை அலுவலா் பிரியங்கா, வேளாண் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிவசங்கா் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் சந்தோசம், இளையராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.