இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, பூவராகவன் தெருவைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் ராம் (40). தறி தொழிலாளியான இவருக்கு சாந்தி (30) என்ற மனைவியும், மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இவா் கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு ஆட்டையாம்பட்டியில் இருந்து நைனாம்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது சைடு ரோடு பகுதியில் இருந்து காா்த்திக் (18) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ராம் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆட்டையம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.