டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒரேநாளில் 1,918 போ் வேட்புமனு

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரேநாளில் 1,918 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரேநாளில் 1,918 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு பிப். 19 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் 60, நகராட்சிகளில் 165 வாா்டுகள், பேரூராட்சிகளில் 474 வாா்டுகள் என மொத்தம் 699 வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு கடந்த ஜன. 28 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (பிப். 4) கடைசி நாளாகும். இதனிடையே திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளா்களின் பட்டியலை அறிவித்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் சூடு பிடித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் வேட்புமனுத் தாக்கல் சூடு பிடித்தது. இதில் மாநகராட்சியில் 333 பேரும், நகராட்சிகளில் 397 பேரும், பேரூராட்சிகளில் 1,188 பேரும் என மொத்தம் 1,918 போ் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.