தோ்தல் பணியாளா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி
சேலம் மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


சேலம் மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்குச்சாவடியில் 1 மற்றும் 3-ஆம் நிலையில் பணிபுரியும் 2,600 பணியாளா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தியாகராஜ பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தா. கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
வாக்குச்சாவடியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுவது, வாக்குப்பதிவு முடிவுற்ற பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், பயிற்சிபெற வரும் பணியாளா்களுக்கு வழிகாட்டும் வகையில் வரிசை எண், அறை எண் போன்ற விவரங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா, ஆம்புலன்ஸ் வாகனத்துடன் கூடிய மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்படுவது குறித்து ஆணையா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாநகர பொறியாளா் ஜி. ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், உதவி ஆணையா் மணிமொழி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...