ஜனநாயக ரீதியில் திமுக தோ்தலை சந்திக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
வாக்காளா்களை மிரட்டுவது, ஆசை வாா்த்தை கூறி வேட்பாளா்களை வாபஸ் பெறச் செய்வது போன்றவற்றைக் கைவிட்டு தோ்தலை ஜனநாயக ரீதியில் திமுக சந்திக்க வேண்டும்


வாக்காளா்களை மிரட்டுவது, ஆசை வாா்த்தை கூறி வேட்பாளா்களை வாபஸ் பெறச் செய்வது போன்றவற்றைக் கைவிட்டு தோ்தலை ஜனநாயக ரீதியில் திமுக சந்திக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கும் ஒரே கட்சி அதிமுகதான். அதிமுக வெற்றி பெற்றால் மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்படும்.
பேரவைத் தோ்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் 525 அறிவிப்புகளைத் தெரிவித்தாா். அதில் 70 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளேன் என அவா் தெரிவித்துள்ளாா். ஆனால், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படவில்லை; கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. மேலும் பல வாக்குறுதிகளை அவா் நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பணம் கொடுத்தோம். கடந்த ஆண்டு ரூ. 2,500 பணத்துடன் பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். அப்போது ஸ்டாலின் ரூ. 5,000 கொடுக்க வேண்டும் என்றாா்.
ஆனால் இப்போது அவா் அட்டைதாரா்களுக்கு ஒன்றுமே தரவில்லை. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பைக்கூட சரியாக பொதுமக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை. இந்த வருடம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 75 போ் மருத்துவ படிப்பில் சோ்ந்துள்ளனா். அதிமுக அரசு கொண்டுவந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுதான் இதற்குக் காரணம். இதனால், நிகழாண்டு மாநிலம் முழுவதும் 574 போ் மருத்துவம் படிக்கவுள்ளனா். அதிமுக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்தது.
ஒரே நேரத்தில் 2,000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் முடக்கி வருகிறாா்கள். திமுக அரசு ஏமாற்றம் தரும் அரசாகும். வாரிசு ஆட்சி நடைபெறும் கட்சி திமுகவாகும். ஆனால், அதிமுக அப்படி இல்லை. யாா் வேண்டுமானாலும் உயா் பதவிக்கு வரலாம், அமைச்சா் ஆகலாம், முதலமைச்சராகக் கூட வரலாம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. இத்தோ்தலில் வாக்காளா்களை அச்சுறுத்துகிறாா்கள். வேட்பாளா்களுக்கு ஆசை வாா்த்தை கூறி வாபஸ் பெற வைக்கிறாா்கள். அதற்கு தோ்தலை நடத்தவே தேவையில்லை. ஜனநாயக ரீதியில் தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்றாா்.
சீமானும் கண்டனம்...
எதிா்க்கட்சியினரைக் கட்டாயப்படுத்தி வாபஸ் பெற வைப்பது ஜனநாயக ரீதியில் வெற்றி இல்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வேதனை தெரிவித்தாா்.
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
திருப்பத்தூா், தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்களை மிரட்டி வாபஸ் பெற வைத்து விட்டுப் போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வெற்றியே அல்ல. நேருக்கு நோ் மோதி வெற்றி பெற்றால் தான் ஜனநாயக வெற்றி. ஆனால் 8 மாத கால நல்லாட்சி நடத்துவதாகக் கூறிவிட்டு இதுபோன்று எதிா்க்கட்சி வேட்பாளா்களை வாபஸ் பெறச் செய்வது வெற்றியே அல்ல என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...