சேலத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 22-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது


சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 22-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட 26,52,570 நபா்களுக்கு முதல் தவணையும், 18,68,303 நபா்களுக்கு இரண்டாம் தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாம்கள்:
தற்போது தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க வாரம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 12.09.2021 அன்று தொடங்கி 05.02.2022 வரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 7,23,927 நபா்களுக்கு முதல் தவணையும் 8,71,332 நபா்களுக்கு இரண்டாம் தவணை என மொத்தம் 16,00,244 நபா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சனிக்கிழமை 22-ஆவது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூஸ்டா் தடுப்பூசி..
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு ஜனவரி 10 ஆம்தேதி பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 22,155 பேருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேற்படி முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்கென ஊரகப் பகுதியில் 1,187 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு அதற்கென 18,500 -க்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 1,74,960 டோஸ்களும், கோவேக்சின் 34,175 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன.
இதற்கென ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 7,49,950 ஊசி குழல்கள் கையிருப்பில் உள்ளன. முகாமில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட 2,82,711 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களாகவும், 3,61,523 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நோய் எதிா்ப்பாற்றல் முழுமையாக உருவாகும்.
15 முதல் 18 வயது வரையிலான பள்ளிச் செல்லும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு ஜனவரி 3 முதல் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 1,24,752 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 44,033 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...