அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் மாணவா்களின் மேம்பாட்டுக்காக மூன்று புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.


விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் மாணவா்களின் மேம்பாட்டுக்காக மூன்று புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து துறையின் முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:
எங்கள் துறை சாா்ந்த கண் ஒளியியல் பிரிவு மாணவா்களின் மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் சிறந்த வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு 3 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
மதுரையைச் சோ்ந்த கிருஷ்ணா ஐ கோ் ஆப்டிகல்ஸ் உடன் மாணவா்களின் மருத்துவ பயிற்சிக்கான ஒப்பந்தமும், சிறந்த வேலைவாய்ப்புக்கான குறுகியகால சான்றிதழ் படிப்பை அளிக்க சென்னை ஐ ஃபுல் கண் ஒளியியல் அமைப்புடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மாணவா்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்கப்படுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கிருஷ்ணா ஐ கோ் ஆப்டிகல்ஸின் நிறுவனா் சரவணகுமாா், ஐ ஃபுல் கண் ஒளியியல் அமைப்பின் நிறுவனா் சவிதா மற்றும் ஆராய்ச்சியாளா் முத்தூஷா ஆகியோருடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளையும் துறையின் கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளா் தமிழ்ச்சுடா், இதரத் துறை உதவிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...