மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய பிப். 28 கடைசி நாள்

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாளாகும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வி.சத்யா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:18 pm

DIN

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாளாகும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வி.சத்யா தெரிவித்துள்ளாா்.

தோட்டக்கலை பயிா்களுக்கு எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலை பெறச் செய்யவும் திருந்திய பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராஃபி பருவ பயிா்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளண்மை கடன் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பா் 8 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெண்டை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் பிப். 15 ஆம் தேதியாக இருந்தது. மேலும் தக்காளி, வாழை, மரவள்ளி ஆகிய தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் பிப். 28 ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்யலாம்.

இதுவரை ராஃபி பயிா்களைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றே பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.