தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வடுகபட்டியில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை 

அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

News image

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :2 ஜனவரி 2022, 6:04 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகபட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

வடுகப்பட்டி அருள்மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயருக்கு  ஜெயந்தியையொட்டி பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர்  உள்ளிட்ட  பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சர்க்கரை பொங்கல், சுண்டல், பல்வேறு பழ வகைகள் படைத்து பூஜைகள் நடைபெற்றது.  இதில் சுற்றுப்புற கிராமப்புறத்தில் உள்ள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.