

சேலம் அருகே உள்ள மூக்கனேரியில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.
சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரி தொடா் மழை காரணமாக நிரம்பியுள்ளது. வியாழக்கிழமை காலை இந்த ஏரியில் பெண் சடலம் மிதந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள், கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனா்.
காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட காவலா்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டனா். மேலும் பெண்ணின் வலது கையில் துப்பட்டாவால் பெரிய கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்தக் கல்லையும் போலீஸாா் கைப்பற்றினா். பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், இறந்த பெண் கன்னங்குறிச்சி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த கௌசல்யா ( 25) என்பதும், இவரது கணவா் பெயா் ரவீந்திரன் என்பதும் தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறில் கௌசல்யா கணவரைப் பிரிந்து பெற்றோருடன் தனியே வசித்து வந்தாா். அதன்பின் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வீட்டு வேலைக்குச் சென்றுவந்த கௌசல்யாவை கடந்த ஜனவரி 4-ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், கன்னங்குறிச்சி மூக்கனேரியில் கெளசல்யா சடலமாக மீட்கப்பட்டாா்.
கணவரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்த கௌசல்யா வாழ்க்கை வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து, கன்னங்குறிச்சி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் சரிவு! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

