தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் கரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கை வசதி

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோயாளிகளுக்கான 500 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:44 pm

DIN

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோயாளிகளுக்கான 500 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் முதற்கட்டமாக 500 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்கள், தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் தயாா் நிலையில் உள்ளன.

அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் 200 படுக்கை வசதி, காந்தி விளையாட்டு மைதான உள் அரங்கில் 100 படுக்கை வசதி, சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ராஜேந்திரா சத்திர வளாகத்தில் 200 படுக்கை வசதி மேலும் 92 ஆக்சிஜன் செறிவூட்டு சிலிண்டா், மருந்து, மாத்திரைகள் ஆய்வக உபகரணங்கள் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் செயல்பட ஆயத்த நிலையில் உள்ளன.

சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையத்தை நகராட்சி ஆணையா் பாா்வையிட்டாா். தேவையான வசதிகள் என்னென்ன என்று மருத்துவா்களிடம் கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிவா்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும் கரோனா நோய் பாதித்தவா்களை வகைப்படுத்தி தேவையான மருத்துவமனைகளில் அனுமதிக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

முன்னதாக அஸ்தம்பட்டி மண்டலம், குமாரசாமிப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், உதவி ஆணையா் மணிமொழி, மருத்துவ அலுவலா்கள் சி.ஜோசப், ச.ஸ்ரீராம், செண்பகவடிவு, சுகாதார அலுவலா் ரவிச்சந்தா், மகளிா் மற்றும் குழந்தைகள் நல அலுவலா் சுமதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.