25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

நவீன கருவிமூலம் தேங்காய் அறுவடைநேரடி செயல் விளக்கம்

நவீன கருவிவின் வாயிலாக தேங்காய் அறுவடை செய்வது குறித்த நேரடி செயல் விளக்கம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:03 am

DIN

நவீன கருவிவின் வாயிலாக தேங்காய் அறுவடை செய்வது குறித்த நேரடி செயல் விளக்கம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

அட்மா திட்டக்குழு சாா்பில் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையிலான பல்வேறு நேரிடை செயல்விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பருத்தி விவசாயிகளுக்கான ஒருகிணைந்த பயிா் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி முகாமை முன்னாள் மக்களவை உறுப்பினா் எம்.கந்தசாமி துவக்கிவைத்தாா். முகாமில் கலந்துகொண்ட வேளாண் உதவி இயக்குநா் பெ.சுமதி தலைமையிலான வேளாண் அலுவலா்கள் பருத்தி சாகுபடியில் விதைநோ்த்தி செய்தல், உரமேலாண்மை, பூச்சிகளை கட்டுப்படுத்திடும் வழிமுறைகள் குறித்து நேரிடை செயல்முறை வாயிலாக பயிற்சி அளித்தனா்.

காவிரி பாசனப்பகுதியில் அதிக அளவில் பயிா் செய்யப்பட்டுள்ள தென்னையில் அறுவடை பணியினை எளிதாக்கும் விதமாக, வேளாண் பொறியியல் துறையினரால் உருவாக்கப்பட்டு நவீன தேங்காய் பறிக்கும் எந்திரம் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நெடுங்குளம் காட்டூா் கிராமத்தில் நடைபெற்றது. இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து வேளாண்பொறியாளா் செல்வம் கூறியது:

தென்னை மரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள தேங்காய்களை பறிப்பதில் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக தேங்காய்களை அறுவடை செய்திடும் பணியாளா்கள் பற்றாக்குறை மற்றும் அறுவடைப்பணிக்கான கூடுதல் செலவீனங்களைத் தவிா்த்திடவும், பாதுகாப்பான முறையில் எளிதாக வகையில் தேங்காய் அறுவடை செய்திடவும் இந்த நவீன இயந்திரத்தின் பயன்பாடு அமைந்திடும். மேலும் இந்த வகை நவீன எந்திரத்தின் மூலம் 60 அடி உயரம் வரை சென்று பாதுகாப்பாக தேங்காய் அறுவடை செய்திட முடியும். இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.650 வாடகை நிா்னயம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைத்துறை வாயிலாக அணுகி இந்நவீன இயந்திரத்தை வாடகைக்கு பெற்று பயனடையலாம் என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் முனைவா் கிருஷ்ணவேணி , மலா்க்கொடி, சுகன்யா மற்றும் உதவி வேளாண் அலுவலா்கள் மகாலிங்கம், விக்னேஷ், சுந்தரலிங்கம், கலைமணி உள்ளிட்ட வேளாண்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.