அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தில்லி செல்கிறார்.
காலை 10.45 மணியளவில் தில்லி புறப்பட்டு செல்லும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது தொகுதிப்பங்கீடு குறித்து இருவரும் பேச உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.
எனவே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை எப்போதும் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதன் கூட்டணி கட்சிகளிடையே நிலவுகின்றன.
முன்னதாக நேற்று மதுரையில் தேஜ கூட்டணி தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இதை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மறுத்தார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami will be visiting Delhi on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக பலத்தை நிரூபிப்போம்: எடப்பாடி பழனிசாமி

விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் ராஜிநாமா
விசாரணைக் கைதி மரணம்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




