காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று(மார்ச் 2) தொடங்குகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :2 மார்ச் 2026, 8:49 am IST

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று(மார்ச் 2) தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.

பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழகம் முழு​வதும் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள், 27,783 தனித் தேர்​வர்​கள், 281 கைதி​கள் என மொத்​தம் 8.27 லட்​சம் பேர் தேர்வு எழுதுகின்​றனர். இம் மாணவ, மாணவிகளுக்கு 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்​டத்​தில் 250 மையங்​களில் 67,516 பேர் எழுதுகின்றனர்.

தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு 4,540 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் போதிய கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாணவா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களைச் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் காற்றோட்டத்துடனும் போதிய வெளிச்சத்துடனும் கூடிய தோ்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு, தோ்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் தோ்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தரைத் தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.

Summary

The Plus 2 public examination in Tamil Nadu begins today (March 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.