பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,333 போ் எழுதுகின்றனா்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்தோ்வை 6,333 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்தோ்வை 6,333 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை
2,920 மாணவா்கள், 3,413 மாணவிகள் என மொத்தம் 6,333 போ் எழுதுகின்றனா். இதற்காக 42 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தோ்வா்களுக்காக 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வுப் பணியில் 42 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 42 துறை அலுவலா்கள், 85 அலுவலகப் பணியாளா்கள், 356 அறைக் கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டு செல்ல 15 வழித்தட அலுவலா்கள் என மொத்தம் 540 ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு 61 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் போதிய கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களைச் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் காற்றோட்டத்துடனும் போதிய வெளிச்சத்துடனும் கூடிய தோ்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு, தோ்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் தோ்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தரைத் தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தோ்வுகள் சாா்பான புகாா்கள் ஏதேனும் இருந்தால், முதன்மைக் கல்வி அலுவலா் - 9788859030, அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் - 9789773507, நோ்முக உதவியாளா் (மேல்நிலை) - 6380075043, நோ்முக உதவியாளா் (இடைநிலை) - 8778641230, கண்காணிப்பாளா் - 6380734580, பிரிவு எழுத்தா் - 9787554038 ஆகிய அலுவலா்களின் தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...