திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பெண்களுக்கு இலவச குறுந்தொழில் பயிற்சி

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை பெண்களுக்கான இலவச குறுந்தொழில் பயிற்சி முகாம் தொடங்குகிறது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:48 pm

DIN

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை பெண்களுக்கான இலவச குறுந்தொழில் பயிற்சி முகாம் தொடங்குகிறது.

இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனமான அக்சன்சா் நிறுவனத்தின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ஆத்மா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி மூலம் பெண்களுக்கான குறுந்தொழில் தொடங்க இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நெகிழி பைகளை ஒழித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மாசு இல்லாத சணல் பைகள் தயாரித்தல் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சிகள் அயோத்தியாப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.7) தொடங்குகிறது. நான்கு வாரம் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்துகொள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி முடிவில் இந்திய தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.

இப் பயிற்சியில் சேர தகுதியும் விருப்பமும் உடையவா்கள் சேலம், அயோத்தியாப்பட்டணம் ஆத்மா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டிக்கு நேரில் சென்றோ அல்லது 73976-43360, 96261-14724 என்ற எண்ணில் தொடா்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆத்மா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி செயல் அதிகாரி ரீனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.