இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
”தேசம் மற்றும் அதன் மக்கள் மீதான தூய அர்ப்பணிப்பே பிரதமர் மோடியின் இலக்கணமாகும். குஜராத் முதல்வராக இருந்தபோது அவர் காட்டிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலிருந்து, பிரதமராக அவர் காட்டிய அர்ப்பணிப்புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான சேவைப் பயணமாகவே இருந்துள்ளது.
முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை முறியடித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை பிரதமர் மோடி இன்று (மார்ச் 22) எட்டியுள்ளார்.
நாட்டின் தலைவராக 8,931 நாள்கள் பொதுப் பதவியில் இருந்த இந்தத் தருணம், இந்தியாவிற்கே முதலிடம் தரும் ஆட்சிமுறை, செயலில் நேர்மை மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராத சேவை ஆகியவற்றில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Prime Minister Shri @narendramodi is now the longest-serving head of a government in India.
— Rajnath Singh (@rajnathsingh) March 22, 2026
Pure devotion to the nation and its people defines PM Modi Ji. From his unwavering commitment as the Chief Minister of Gujarat to his dedicated leadership as the Prime Minister, his life⦠pic.twitter.com/llGPwziZZC
Summary
Union Defense Minister Rajnath Singh has tweeted that Prime Minister Narendra Modi has become the longest-serving head of a government in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
40 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து சென்றடைந்த முதல் இந்திய பிரதமர் மோடி!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




