‘தாமரை எங்கும் மலரும்’ என பிரதமர் மோடி மதுராபூரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பேரணியில் உரையாற்றியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கம், மதுராபூரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தப் புனித மண்ணிலிருந்து கங்கை அன்னையை நான் வணங்குகிறேன். மதுராபூர், டைமண்ட் ஹார்பர், ஜாய்நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு பெருமளவில் திரண்டுள்ளனர்.
உங்கள் வருகையே உங்கள் முடிவை உணர்த்திவிட்டது. மே 4 ஆம் தேதி வெளியாகப்போவது வெறும் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல. ஒரு மாற்றம் நிகழும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்
மேற்கு வங்கம் முழுவதும் ஒரு மாற்றத்துக்கான அலை வீசுகிறது. முதல் கட்டத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக பெண்களும் இளைஞர்களும் வாக்களித்த விதத்தை நாடு முழுவதும் பார்த்து வருகிறது.
இன்னும் 10 நாள்களில் வாக்குகள் எண்ணப்படும்போது, தாமரை எங்கும் மலரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுவே மாற்றத்துக்கான சரியான நேரம் என்று வங்காள மக்களையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Summary
Prime Minister Modi addressed the Vijay Sankalp Rally held in Madhurapur, stating that "the lotus will bloom everywhere."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. ‘மாபெரும் ஆளுமையாக திகழ்ந்ததாகப் புகழாரம்’!!

நேரு சாதனை முறியடிப்பு! வரலாற்றில் நீண்ட கால பிரதமரானார் மோடி!

நீண்ட கால பிரதமர்! நேரு சாதனையை முறியடிக்கும் மோடி!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani




