பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நேரு சாதனை முறியடிப்பு! வரலாற்றில் நீண்ட கால பிரதமரானார் மோடி!

நேரு சாதனையை பிரதமர் மோடி முறியடித்தது பற்றி...

Modi

பிரதமர் மோடி - ANI

Published On :

மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில், தொடர்ந்து மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை நரேந்திர மோடி படைத்துள்ளார்.

கடந்த 2014, மே 26 ஆம் தேதி முதல்முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். இன்றுடன், பிரதமர் பதவியில் 4,399 நாள்களை நிறைவு செய்துள்ளார்.

முன்னதாக, நாட்டின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, 1952 மே 13 முதல் 1964 மே 27, அவர் காலமாகும் வரை 4,398 நாள்கள் பிரதமராக இருந்தார்.

தற்போது இந்த சாதனையை நரேந்திர மோடி முறியடித்துள்ளார். இந்த மைல்கல், மோடியின் அரசியல் பயணத்தில் மற்றொரு முக்கியச் சாதனையாக அமைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24, அவர் காலமாகும் வரை 4,077 நாள்கள் பிரதமராக இருந்தார். இந்த சாதனையை கடந்த 2025 ஜூலை 25 அன்று பிரதமர் மோடி முறியடித்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு

சுதந்திரத்துக்குப் பிறகு நேரு பிரதமராக இருந்தபோது, நாட்டின் மக்கள்தொகை சுமார் 34 கோடியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்றபோது 131 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 146 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில், நாட்டின் ஜனநாயகமும் விரிவடைந்துள்ளது. 1951 முதல் பொதுத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட நிலையில், 2024 பொதுத் தேர்தலில் 744 கட்சிகள் போட்டியிட்டது. முதல் பொதுத் தேர்தலில் 17 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 98 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு நேருவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Summary

Nehru's record broken - Modi becomes the longest-serving Prime Minister in history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.